கரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு இன்று முதல் வருகிற 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வருபவர்களை எச்சரிக்கை செய்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு செல்லும் மாநில எல்லை பகுதியான தரங்கம்பாடி தாலுகா நல்லாடை காவல் சோதனைச் சாவடி, மற்றும் பொறையார் நண்டலாறு காவல் சோதனைச் சாவடி எல்லைகளில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்களை மட்டுமே மாவட்ட எல்லைக்குள் அனுமதிப்பதால் சாலைகள் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இதையும் படிங்க:கரோனா ஊரடங்கு: வாகன ஓட்டிகளுக்கு அபராதம்!