நாகப்பட்டினம் மாவட்டம், புதுப்பள்ளி கிராமத்தில், கடற்கரை ஓரம் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கடலோர காவல் துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவலர்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கன்டியன்காடு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில், கஞ்சா மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டிருபப்து தெரிய வந்தது. பின்னர், அங்கு சென்ற காவல் துறையினர் மூன்று கஞ்சா மூட்டைகளை தோண்டி எடுத்தனர். அதில் ஒரு மூட்டைக்கு 20 பார்சல்கள் வீதம், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான, சுமார் 120 கிலோ கஞ்சா பொட்டலங்கள் அதில் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 10 ஆண்டு சிறை