நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காலகஸ்திநாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. மாதானத்திலிருந்து மேமாத்தூர் வரை எரிவாயு குழாய்கள் அமைப்பதற்காக காலகஸ்திநாதபுரத்தில் ராட்சத குழாய்கள் இறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ராட்சத குழாய் விவசாய நிலங்களில் பயிரிடப்படுவதற்காக நடவு செய்யப்பட்ட நாற்று, பருத்தி உள்ளிட்ட பயிர்களை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் துணையுடன் பணிகளை செய்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதாகவும், கெயில் நிறுவனம் செய்யும் வேலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் நேற்று விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
பருத்தி செடிகளை அழித்து குழாய் பதிப்பு: விவசாயிகள் வேதனை - nagappattinam
நாகை: மயிலாடுதுறை அருகே பருத்தி செடிகளை அழித்து, கெயில் நிறுவனம் அத்துமீறி குழாய் பதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காலகஸ்திநாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. மாதானத்திலிருந்து மேமாத்தூர் வரை எரிவாயு குழாய்கள் அமைப்பதற்காக காலகஸ்திநாதபுரத்தில் ராட்சத குழாய்கள் இறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ராட்சத குழாய் விவசாய நிலங்களில் பயிரிடப்படுவதற்காக நடவு செய்யப்பட்ட நாற்று, பருத்தி உள்ளிட்ட பயிர்களை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் துணையுடன் பணிகளை செய்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதாகவும், கெயில் நிறுவனம் செய்யும் வேலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் நேற்று விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காலகஸ்திநாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. மாதானத்திலிருந்து மேமாத்தூர் வரை எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. காலகஸ்திநாதபுரம் ராட்சத குழாய்கள் நேற்று இறக்கப்பட்டு விவசாய நிலங்களில் பயிரிடப்படுவதற்காக நடவு செய்யப்பட்ட நாத்தை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் துணையுடன் பணிகளை செய்ததாகவும், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காகவே இந்த குழாய்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் நிலங்களை பாழ்படுத்தி கெயில் நிறுவனம் செய்யும் வேலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் நேற்று விவசாயிகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் கெயில் நிறுவன அதிகாரிகள் விவசாயிகளின் நிலங்களில் குழாய்களை பதிப்பதற்காக விவசாயிகளுக்கு பணம் அளிக்க முயற்சி செய்து வருகின்றனர். பணம் பெற முடியாது, குழாய் பதிக்க கூடாது என்று கூறம் விவசாயிகளை மிரட்டுவதாகவும், வலுக்கட்டாயமாக பணத்தை வழங்குவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விஜயலட்சுமி என்ற மூதாட்டியின் விளைநிலத்தில் அத்துமீறி நுழைந்து அறுவடைக்கு தயாராக இருந்த பருத்திச் செடிகளைத் பொக்லைன் இயந்திரம் மூலம் பருத்திச் செடியை அழித்து கெயில் நிறுவனம் குழாய்களை பதித்து வருவதை கண்ட மூதாட்டி விஜயலட்சுமி குழாய் பதிப்பதை தடுக்க முற்பட்டுள்ளார். அவரை மிரட்டி விட்டு பணிகளைத் தொடர்ந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தன் நிலத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக நிலத்தடி நீரைக் கொண்டு நிலங்களை உழுது நாத்து நடும் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் அத்துமீறி விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய்கள் பதித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி:- 01, விஜயலட்சுமி பாதிக்கப்பட்டு விவசாயி, 02, சிவானந்தம் விவசாயி
Conclusion: