நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா 6ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
மேலும் இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.