குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில நிர்வாகிகள், இஸ்லாமியர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதை கண்டித்து, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக டெல்லி கலவரத்தில் வன்முறை நிகழ்த்திய காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க... டெல்லி கலவரம்: வாழ்க்கையை முடித்த வதந்தி.!