ETV Bharat / state

கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிய கிராமங்கள்; 7ஆவது நாளாக மீட்புப்பணிகள் தீவிரம் - 7வது நாளாக மீட்பு பணி தீவிரம்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிய கரையோர மக்களுக்கு 7ஆவது நாளாக படகு மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 11, 2022, 7:20 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியே 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் கடலுக்குச்செல்கிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றிற்குள் உள்ள திட்டுக்கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்களில் முற்றிலுமாகப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இவ்வாறு கிராமங்களில் தாழ்வானப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்ட நிலையில், கால்நடைகளுக்கும் தீவனம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிய கிராமங்கள்; 7ஆவது நாளாக மீட்புப்பணி தீவிரம்

இந்நிலையில், திட்டுப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை, 7ஆவது நாளான இன்று (ஆக.11) படகு மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து, பள்ளி செல்லும் குழந்தைகளை படகுமூலம் மீட்டு கரையில் விடப்பட்டு, அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: எங்களை மீண்டும் கேரளாவுடன் இணைத்து விடுங்கள்; மீனவர்கள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.