ETV Bharat / state

ஓ.என்.ஜி.சி. குழாய்களை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!

author img

By

Published : Jan 5, 2020, 11:29 AM IST

நாகப்பட்டினம்: விவசாய நிலங்களில் அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி. குழாய்களை அகற்றக்கோரி மத்திய மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நாகை ஒ.என்.ஜி.சி குழாய்அமைக்கும் பிரச்சனை ஒ.என்.ஜி.சி நிறுவனம் பிரச்சனை ஒ.என்.ஜி.சி குழாய்களை அகற்ற கோரிக்கை Nagai ONGC pipeline problem ONGC pipeline problem
Nagai ONGC pipeline problem

நாகை மாவட்டம் பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு அமைத்துள்ளது. இதன் அருகிலேயே இயற்கை எரிவாயு கொண்டுசெல்ல கெயில் நிறுவனம் குழாய் அமைத்துள்ளது.

இந்தக் குழாய் அமைக்கும் பணிகள் பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை 26 கி.மீ. தூரம் முடிவடைந்துள்ளது. இந்தக் குழாயில் உள்ள சேறு, சகதியை அகற்றும் பணி சில நாள்களாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை கெயில் நிறுவன குழாய் தூய்மை பணியின்போது குழாயிலிருந்து அதிவேகத்தில் வெளியேறிய காற்றின் அழுத்தம் காரணமாக சுத்தம் செய்ய பயன்படுத்திய ரப்பர் உருளை, வால்வு ஆகியவை அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் விழுந்தது. இதனால் வயல் பகுதியில் நன்றாக விளைந்த சம்பா சாகுபடி பயிர்கள் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அச்சமடைந்த கிராம மக்கள் அந்நிறுவன வளாகத்தில் திரண்டு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர்கள் கூறுகையில், சுற்றுச்சுவர் பணிகள் முடியாததால்தான் ரப்பர் உருளை வயல் பகுதியில் விழுந்ததாகவும் சுவர் அமைக்கும் பணிகள் முடிந்த பின்னரே பாதுகாப்புடன் தூய்மைப் பணிகள் நடைபெறும் எனவும் உறுதியளித்தனர்.

ஓ.என்.ஜி.சி. குழாய்

அதன்பின் கிராம மக்கள் கூறுகையில், ஓ.என்.ஜி.சி. கெயில் நிறுவனங்களால் தாங்கள் அச்சத்துடன் வாழ்ந்துவருவதாகவும் உடனடியாகக் குழாய்களை தங்கள் பகுதியிலிருந்து அகற்றுமாறு மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய மீனவர்கள்!

Intro:சீர்காழி அருகே கெயில் நிறுவன குழாய் தூய்மைபடுத்தும் பணியில் போது மண் சகதியுடன் ரப்பர் உருளை வயல் வெளியில் விழுந்ததால் பரபரப்பு. ஒ.என்.ஜி.சி மற்றும் கெயில் நிறுவனத்தை அகற்ற மத்திய மாநில அரசுக்கு கிராமமக்கள் கோரிக்கை.Body:நாகை மாவட்டம் பழையபாளையம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் சேமிப்பு கிடங்கு அமைத்துள்ளது.இதன் அருகிலேயே இயற்கை எரிவாயு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் குழாய் அமைத்துள்ளது.பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை 26 கி.மீ தூரம் குழாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.இந்த குழாயில் உள்ள சேறு மற்றும் சகதியை அகற்றும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை கெயில் நிறுவன குழாய் தூய்மை பணியின் போது குழாயில் இருந்து அதிவேகத்தில் வெளியேறிய காற்றின் அழுத்தம் காரணமாக சுத்தம் செய்ய பயன்படுத்திய ரப்பர் உருளை மற்றும் வால்வு அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் விழுந்தது.வயல் பகுதியில் நன்றாக விளைந்த சம்பா சாகுபடி பயிற்கள் சில இடங்களில் பாதிக்கபட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் அந்நிறுவன வளாகத்தில் திரண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.சுற்றுச்சுவர் பணிகள் முடியாததால்தான் ரப்பர் உருளை வயல் பகுதியில் விழுந்ததாகவும் சுவர் அமைக்கும் பணிகள் முடிந்த பின்னரே பாதுகாப்புடன் தூய்மை பணிகள் நடைபெறும் எனவும் உறுதியளித்தனர். பின்னர் பேசிய கிராமமக்கள் ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் நிறுவனங்களால் தாங்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் எனவே தங்கள் பகுதியில் இருந்து அகற்ற மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.