ETV Bharat / state

கரோனாவை மறந்து கறி கடையில் குவிந்த பொதுமக்கள்!

திருப்பூர்: கரோனாவையும் பொருட்படுத்தாமல் நேற்று பொதுமக்கள் கறி வாங்கவும், மீன் வாங்கவும் கூட்டம் கூட்டமாக இறைச்சி கடையில் குவிந்தனர்.

கறி கடையில் குவிந்த பொதுமக்கள்
கறி கடையில் குவிந்த பொதுமக்கள்
author img

By

Published : Mar 30, 2020, 8:33 AM IST

கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களான காய்கறி, இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

கரோனா வைரஸை நினைத்துக்கூட பார்க்காத மக்கள் கும்பல் கும்பலாக கறி, மீன், காய்கறி ஆகியவற்றை விரும்பி வாங்கிச் சென்றனர். மேலும், சமூக இடைவெளி என்பதை துளிகூட யாருமே பின்பற்றவில்லை.

திருப்பூர் சந்தையில் குவிந்த மக்கள்

மேலும், திருப்பூர் சாலைகளில் காவல் துறையினர் வாகனங்களை கட்டுப்படுத்தவில்லை. இதனால், வழக்கமான ஒரு ஞாயிற்றுக்கிழமைபோல போக்குவரத்து காணப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் அதே நேரத்தில் சமூக இடைவெளியினை பின்பற்றவும் வேண்டும்.

அதேபோல், சேலம் மாவட்டத்திலும் இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியில் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் ஆடு, கோழி, மீன் இறைச்சியை வாங்கிச் சென்றனர்.

சில இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு இறைச்சி வாங்க குவிந்தனர் .

சேலம் சந்தையில் அலைமோதிய மக்கள்

மேலும், நாகை மாவட்டத்திலும் காய்கறி, கோழிக்கறி, மீன் உள்ளிட்ட கடைகளில் நுகர்வோர் நிற்கும் வகையில் மூன்று மீட்டர் இடைவெளியில் வட்டமிடபட்டு வியாபாரம் நடைபெற்றது. மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கறி கடையில் குவிந்த நாகை மக்கள்

இதையும் படிங்க: 144 தடை உத்தரவையும் மீறி கறிக் கடைகளில் குவியும் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.