ETV Bharat / state

நாகூர் அருகே தொடரும் கடல் அரிப்பு - தடுப்புச்சுவர் அமைத்துத் தருமா அரசு? - nagai fishermen request for protection from sea erosion

நாகை: நாகூரில் பல ஆண்டுகளாகத் தொடரும் கடல் அரிப்பினால் மீனவர்களின் வீடுகள், அசையாச் சொத்துகள் ஆகியவற்றைக் காப்பாற்ற, கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்துத்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

pattinacherry-fishermen-request-for-protection-from-sea-erosion
கடலரிப்பு
author img

By

Published : Dec 13, 2019, 5:55 PM IST

நாகை மாவட்டம், நாகூருக்கும் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூருக்கும் இடையே உள்ளது பட்டினச்சேரி மீனவ கிராமம். இந்தக் கிராமத்திற்கு அருகே தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நாகூர் , பட்டினச்சேரி கிராமத்தின் உள்ளே கடல் நீர் புகுந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால், தற்போது அதிக அளவிலான கடல் அரிப்பு ஏற்பட்டு, இக்கிராமத்தின் உள்ளே கடல் நீர் புகுந்து வருவதால் அப்பகுதியினர் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கடல் சீற்றத்தால் கடல் நீர் ஊர்ப் பகுதியில் உள்ளே அதிகளவில் புகுந்து, கரையோரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. மேலும், கடல் அரிப்பானது நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நாகூர், பட்டினச்சேரி கடற்கரையில் மீதமுள்ள தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து அழிந்து வரும் சூழல் உருவாகியுள்ளது.

கடல் அரிப்புக்கும், பாதிப்புக்கும் முக்கியக் காரணம் அருகில் உள்ள தனியார் துறைமுகம் என அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே, துறைமுகத்தின் வளர்ச்சிக்காக ஒரு பகுதியில் கருங்கல் கொட்டப்பட்டதால் மறு பகுதியில் 300 மீட்டர் அளவிற்கு கடல் நீர் உள்ளே புகுந்து கடல் அரிப்பு அதிகரித்து இருப்பதாகவும், இதனால் படகுகளை நிறுத்த முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் தவித்து வருவதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கடல் அரிப்பினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை ஒரு வட்டாட்சியர் கூட நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறுகின்றனர். மேலும் கடல் அரிப்பில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க முகத்துவாரத்தின் இருபுறமும் கருங்கற்கள் கொட்டி, தடுப்புச் சுவர் அமைத்தால் மட்டுமே மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முடியும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கடல் அரிப்பால் பாதுகாப்பு கருதி தடுப்புச்சுவர் அமைத்துத்தர மீனவர்கள் கோரிக்கை..!

இதையும் படிங்க:

நாகையில் வணிகர்கள் கடையடைப்பு, மீனவர்கள் வேலை நிறுத்தம்...!

Intro:நாகையை அடுத்த நாகூரில் ஆண்டா ஆண்டுகளாக தொடரும் கடலரிப்பு - மீனவர்களின் வீடுகள் மற்றும் உடமைகளை காப்பாற்ற, கருங்கல் தடுப்புசுவர் அமைத்துத்தர கோரிக்கை. Body:நாகையை அடுத்த நாகூரில் ஆண்டா ஆண்டுகளாக தொடரும் கடலரிப்பு - மீனவர்களின் வீடுகள் மற்றும் உடமைகளை காப்பாற்ற, கருங்கல் தடுப்புசுவர் அமைத்துத்தர கோரிக்கை.

நாகை மாவட்டம், நாகூருக்கும் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூருக்கும் இடையே உள்ளது பட்டினச்சேரி மீனவ கிராமம். கிராமத்திற்கு அருகே வாஞ்சூர் தனியார் துறைமுகம் அமைக்கபட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நாகூர் , பட்டினச்சேரி கிராமத்தின் உள்ளே கடல் நீர் புகுந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் தற்போது அதிக அளவிலான கடல் அரிப்பு ஏற்பட்டு, பட்டினச்சேரி கிராமத்தின் உள்ளே கடல் நீர் புகுந்து வருவதால் அப்பகுதியினர் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடல் சீற்றத்தால் கடல் நீர் ஊர் பகுதியில் உள்ளே அதிக புகுந்தால் கரையோரத்தில் ஏராளமான வீடுகளும், 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும், கடல் அரிப்பானது நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நாகூர், பட்டினச்சேரி கடற்கரையில் மீதமுள்ள தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து அழிந்து வருகின்றன. கடல் அரிப்புக்கும் பாதிப்புக்கும் முக்கிய காரணம் அருகில் உள்ள காரைக்கால் தனியார் துறைமுகம் என குற்றச்சாட்டும் அப்பகுதி மீனவர்கள், துறைமுகத்தின் வளர்ச்சிக்காக ஒரு பகுதியில் கருங்கல் கொட்டப்பட்டதால் மறு பகுதியில் 300 மீட்டர் அளவிற்கு கடல் நீர் உள்ளே புகுந்து கடலரிப்பு அதிகரித்து இருப்பதாகவும் இதனால் படகுகளை நிறுத்த முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் மீனவர்கள்.கடல் அரிப்பினால் ஏற்படும் பாதிப்புகுரித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை ஒரு வட்டாட்சியர்கூட ஆய்வு மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டும் அவர்கள், கடல் அரிப்பில் இருந்து மீனவர்களை பாதுகாக்க முகத்துவாரத்தின் இரண்டுபுறமும் கருங்கல்கள் கொட்டி தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கமுடியும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பேட்டி - 01 சத்யா - பட்டினச்சேரி
02 இளஞ்சியம் - நாகூர்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.