ETV Bharat / state

நிரம்பி வழியும் கரோனா மையம்: சிகிச்சையளிக்க இடமில்லாமல் தவிக்கும் நோயாளிகள் - mayiladudurai govt hospital

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இடம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

corona patient
corona patient
author img

By

Published : Aug 11, 2020, 10:43 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 200 படுக்கைகள் கொண்ட புதிய கட்டட கரோனா வார்டில் 202 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட 35 நோயாளிகள் சீர்காழி அரசு மருத்துமனையிலும், 11 பேருக்கு தனியார் கல்லூரி விடுதியிலும் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்நிலையில், மேலும் புதிதாக வந்த 20 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இடவசதி இல்லாததால் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால், பெரும்பாலானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவமனையில் போதிய இட வசதி கிடைத்தவுடன் அவர்களை மீண்டும் அழைத்து வந்து சிகிச்சையளிக்கப்படும் எனக் கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இடமில்லாமல் தவிக்கும் நோயாளிகள்
இடமில்லாமல் தவிக்கும் நோயாளிகள்

இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதால், மேலும் கரோனா பரவ வாய்ப்புள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வளாகங்கள் வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் திராவிட கட்சிகளை வீழ்த்தும் - அர்ஜூன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.