ETV Bharat / state

பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்!

author img

By

Published : Oct 20, 2020, 7:16 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 20 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.

பனை விதைகளை நடும் காட்சி
பனை விதைகளை நடும் காட்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புங்கனூர் ஊராட்சி சார்பாக சாலை ஓரங்களில் 20 ஆயிரம் பனை விதை விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட திட்டத்தை நாகப்பட்டினம் ஆட்சியர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது ‘மண் காக்க மாபெரும் பணியாய் ஒன்றாய் இணைந்து கரம் கோர்த்து பனை நடுவோம் வாருங்கள்’ என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பனை விதைகளை நடும் காட்சி

மேலும் இயற்கை சீற்றங்களைத் தாங்கி நிற்கக்கூடியது பனைமரம் என்பதால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பனை விதைகளை விதைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடந்து, பனை விதைகளை விதைக்க முன் வருவோம் என்று மக்களிடம் பனை விதைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொது இடங்கள், வயல் வரப்புகளில் பனை போட்டுத் தருவதாகவும் கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

அதன் ஒரு பகுதியாக சீர்காழி அடுத்த புங்கனூர் கிராமத்தில் ஊராட்சி சார்பாக 20000 பனை விதைகளை விதைக்கும் திட்டத்தை தொடங்கினர். இதில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனர்.

இதையும் படிங்க: ’காவிரி காப்பாளர்’ பட்டம் சூட்டிக்கொண்டு கொள்முதல் நிலையங்களை கண்டுகொள்ளாத முதலமைச்சர் - ஸ்டாலின் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.