ETV Bharat / state

நெல் பயிர் மழையில் நனைந்தது: நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள்! - நஷ்டம்

நாகப்பட்டினம்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை நம்பி, நெல் பயிர்களுடன் காத்திருந்த விவசாயிகளின் பயிர் மழையில் நனைந்ததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

paddy
author img

By

Published : Sep 12, 2019, 11:15 PM IST

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்காத போதும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, தாலுகாக்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி ஒரு லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர்.

தற்போது, அறுவடை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், விவசாயிகளிடம் நெல் பயிர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசின் நிதியுதவியுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு அரசு 41 இடங்களில் திறந்துள்ளது. அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், 1ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்படும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்திருந்தார்.

நெல் பயிர் மழையில் நனைந்தது

இந்நிலையில் குத்தாலம் தாலுகா வழுவூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமும் அறிவித்திருந்தது, ஆனால் திறக்கவில்லை. அரசின் அறிவிப்பை நம்பி, வழுவூர் நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் பயிர்களை குவித்து வைத்திருந்தனர். நேற்று திடீரென்று மழை பெய்த காரணத்தால், நெல் மணிகள் நனைந்துவிட்டது. இதனால், நெல் பயிர்களை தனியாரிடமும் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கூடுதலாக கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் பயிர்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை நம்பி, நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள், மழையில் நனைந்ததால் விவசாயிகள் வேதனை:-Body:குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்காத போதும், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, தாலுகாக்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி 1லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது, அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசின் நிதியுதவியுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு 41இடங்களில் திறந்துள்ளது. அதிக அளவில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் கூடுதலாக செய்யப்படும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சர் ராமவிலாஸ்பாஸ்வான் அறிவித்திருந்தார். குத்தாலம் தாலுகா வழுவூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமும் அறிவித்திருந்தது. ஆனால் திறக்கவில்லை. அரசின் அறிவிப்பை நம்பி, வழுவூர் நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட நெல்லை குவித்து வைத்திருந்தனர். நேற்று திடீரென்று மழை பெய்த காரணத்தால், நெல் மணிகள் நனைந்துவிட்டது. இதனால், நெல்லை தனியாரிடமும் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கூடுதலாக கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பேட்டி: அறிவழகன் - விவசாயி.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.