மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு தினசரி 2000 நெல் மூட்டைகள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற நெல் மூட்டைகளை அந்த நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்துவிட்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டது.
அக்டோபர் 3ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் 45 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன.
இதனால் விவசாயிகள் சம்பா பணிகளை தொடங்க முடியாமல் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரயில் மூலம் ஈரோட்டிற்கு வந்தடைந்த 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்!