நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த ஆதலையூர் ஆலமரத்தடி பேருந்து நிறுத்த கட்டட ஜன்னலில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக திருக்கண்ணபுரம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருக்கண்ணபுரம் காவல்துறையினர், முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நாகை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த முதியவர் யார்? ஏன் எவ்வாறு இறந்தார் என வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: படித்தது ஹோமியோ; பார்ப்பது அலோபதி சிகிச்சை