ETV Bharat / state

நாம் தமிழர் கட்சி வாக்குறுதிகளை மு.க. ஸ்டாலின் காப்பியடித்துள்ளார் - சீமான்! - நாம் தமிழர் கட்சி வாக்குறுதி

சீர்காழியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் தொடர்ச்சியாக கூறிவந்ததை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காப்பியடித்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் என விமர்சனம் செய்துள்ளார்.

ntk
ntk
author img

By

Published : Mar 17, 2021, 10:19 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் கவிதா அறிவழகனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கனைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது சீமான் கூறியதாவது, "தமிழ்நாட்டை ஆண்டு நாசம் செய்தது திமுகதான். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நாம் தமிழர் கட்சி சொல்லி வந்த நிலையில், தற்போது ஸ்டாலின் அதை காப்பியடித்து சொல்லி வருகிறார். சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது மனித கழிவுகளை யார் அள்ளினார்கள்? பட்டு பூச்சி வளர்ப்பு , ஆடு , மாடு வளர்ப்பு என நான் அறிவித்ததை காப்பி அடித்து தற்போது ஸ்டாலின் மக்களிடையே அறிவித்து வருகிறார்" என்றார்.

சீர்காழி தேர்தல் பரப்புரையில் சீமான்

முன்னதாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் சீமானை சந்தித்தனர். அப்போது அரசாணை 45 உடனடியாக அமல்படுத்த வேண்டும், மேலும், அரசு கல்லூரிகளைவிட 30 மடங்கு அதிக கட்டணத்தை எக்காரணம் கொண்டும் கல்லூரி நிர்வாகம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இதையும் படிங்க: கோரிக்கையை ஏற்றது தமிழ்நாடு அரசு: மருத்துவ மாணாக்கரின் போராட்டம் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.