ETV Bharat / state

வீடு வீடாக நடந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் - தேர்தல் பரப்புரை

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை சுகாதார சீர்கேட்டை சரி செய்ய கோரி முழக்கமிட்டவாறு வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீடு வீடாக நடந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

author img

By

Published : Apr 4, 2021, 1:59 PM IST

தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 4) அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி.காசிராமன் ஆரவாரமின்றி பரப்புரை வாகனம் இல்லாமல் வீதி வீதியாக நடந்து சென்று விவசாய சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

ஒவ்வொரு முறையும் புதுமையான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமன், பரப்புரையின் இறுதி நாளான இன்று மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சிக்கித் தவிக்கும் நாச்சிமுத்து நகர், எடத்தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறியும், சாலைகளில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீரால் ஏற்படும் சீர்கேட்டை கண்டித்து கண்டன முழக்கமிட்டவாறும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தும், சீர்கேட்டை கண்டித்து கண்டன முழக்கமிட்டவாறும் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசி ராமன் வாக்காளர்களின் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமல் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.