ETV Bharat / state

'96' படத்தை ஞாபகப்படுத்திய முன்னாள் மாணவர்கள்

நாகை: மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

முன்னாள் மாணவர்கள்
author img

By

Published : Jun 17, 2019, 11:28 AM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் 1987-90ஆம் கல்வி ஆண்டில் பயின்ற வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரி பருவம் முடிந்து ஒவ்வொரு மாணவனும் பல்வேறு நிலைகளை கடந்து திருமணம் செய்து பல்வேறு இடங்களில் தங்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.

'96' படத்தில் தங்களது பள்ளி கால நண்பர்களை சந்தித்து பேசிக்கொள்வது போன்றே வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு 28 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பிற்காக குவைத், கத்தார், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ள மாணவர்கள் தங்களது நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

முன்னாள் மாணவர்கள்

தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட இவர்கள் ஒருவருக்கொருவர் கூடிப்பேசி, கவிதை வாசித்தல், பாடல்பாடுவது உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். மேலும் தாங்கள் படித்த தேசிய மேல்நிலைப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், அதற்காக நிதி முன்னாள் மாணவர்களிடம் சேகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Intro:மயிலாடுதுறையில் கல்லூயில் படித்து, 28 ஆண்டுகளுக்கு பிறகு 3 வது முறையாக சந்தித்துக்கொண்ட மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிக்;கு கட்டிட நன்கொடை வழங்க முடிவு:-Body:நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் ஏ.வி.சி; கல்லூரியில் 1987-90ம் கல்வி ஆண்டில் பயின்ற வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மயிலாடுதுறையில்; நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரி பருவம் முடிந்து ஒவ்வொரு மாணவனும் பல்வேறு நிலைகளை கடந்து தற்போழுது ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல துறைகளில் பணியாற்றும் இவர்கள் தற்போது திருமணம் செய்து பல்வேறு இடங்களில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இம்மாணவர்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட நவீன வசதிகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு வந்த அனைவரும் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இன்று சந்தித்து கொண்டனர். இதற்காக குவைத், கட்டார், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர். இன்று , ஒருவருக்கொருவர் கூடிப்பேசியும், ஓரங்கநாடகம், கவிதை வாசித்தல், பாடல்பாடுவது உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். மேலும் தாங்கள் படித்த தேசிய மேல்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், அதற்காக நிதி முன்னாள் மாணவர்களிடம் சேகரித்து வருவதாகவும் தெரிவித்த அவர்கள், கணிசமான தொகை சேர்ந்ததும், பள்ளி வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர். அனைவரும் ஒன்றிணைந்து புதிய கூட்டுத்தொழில் துவங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

பேட்டி:

1.புகாரி – குவைத்திலிருந்து வந்த முன்னாள் மாணவர

2. கௌதம் - இந்தோனிஷியாவிலிருந்து வந்த முன்னாள் மாணவர்

3. சரவணன் - முன்னாள் மாணவர் Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.