மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் என்னும் ஊரில் அருள்மிகு தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் செவ்வாய் ஸ்தலமாகவும் விளங்குகிறது.
தையல்நாயகி வைத்தியநாதசுவாமி ஆலயத்தினுள் முத்துக்குமாரசுவாமிக்கு தனி சந்நிதியும், அங்காரகன் எனும் செவ்வாய்க்கு தனி சந்நிதியும் உள்ளது. இந்தக் கோயிலில் தினமும் 1000-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக பசுமடத்திலிருந்து மாடு மற்றும் கன்று ஆகியவற்றினை அழைத்து வந்து கோபூஜை நடைபெற்றது.
மேலும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் கோயில் பிரகாரத்தில் கும்மியடித்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:புத்தாண்டிலும் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.. அரசாணை வெளியிடும் வரை தொடரும் என அறிவிப்பு..