ETV Bharat / state

’மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்’ மக்கள் வேண்டுகோள்! - people

நாகை: மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தை புதிய மாவட்டமாக காந்திஜெயந்தி தினத்தில் அறிவிக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என மாவட்ட அமைப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

new dist
author img

By

Published : Aug 16, 2019, 8:29 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கால் நூற்றாண்டு கோரிக்கை, கடந்த ஒரு மாதமாக மயிலாடுதுறை கோட்டத்தில் வலுத்துள்ளது. இதனை வலியுறுத்தி பல கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திரதின விழா கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைப் பிரித்து இரண்டு புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, மயிலாடுதுறையில் மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வேலூர் மாவட்டத்தைப் பிரித்து ஒரு வருவாய் கோட்டத்தை மாவட்டமாக அறிவித்தது போன்று உடனடியாக நாகையிலிருந்து மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டமாக காந்தி ஜெயந்தி தினத்தில் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாவட்ட அமைப்புக் குழு சார்பாக கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்வேல்

மேலும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், பேரணி, உண்ணாவிரதம், பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.

Intro:மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தை புதிய மாவட்டமாக காந்திஜெயந்தி தினத்தில் அறிவிக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும், மாவட்ட அமைப்புக்குழுவினர் பேட்டி:-Body:மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கோரிக்கை, கடந்த ஒரு மாதமாக மயிலாடுதுறை கோட்டத்தில் வலுத்துள்ளது. கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை கோட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மயிலாடுதுறை கோட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைப் பிரித்து இரண்டு புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, மயிலாடுதுறையில் மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் கூறுகையில் வேலூர் மாவட்டத்தை பிரித்து ஒரு வருவாய் கோட்டத்தை மாவட்டமாக அறிவித்தது போன்று உடனடியாக நாகையிலிருந்து மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தை பிரித்து புதிய மாவட்டமாக வருகிற அக்.2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாவட்ட அமைப்பு குழு சார்பாக கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், பேரணி, உண்ணாவிரதம், பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதி ஆறுபாதி கல்யாணம் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக்குழுவினர் பங்கேற்றனர்.

பேட்டி:- செந்தில்வேல் - மாவட்ட அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.