72ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கப்பட்டு முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் லலிதா மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா முன்னிலையில் காவல் துறையினரின் அலங்கார அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட 30 காவலர்கள் மற்றும் மருத்துவர் ஒருவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:155 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு - ஆட்சியர் லலிதா