நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜாகவுண்டம் பாளையம் பகுதியில் லேப்டாப் சர்வீஸ் சென்டர் நடத்தி வருபவர் தமிழரசு. இவர் கூட்டப்பள்ளி பகுதியில் ஒருவீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த சென்றபோது கடையின் கதவை பூட்டி சென்றுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சென்டரின் கதவை உடைத்து உள்ளே சென்று கடையிலிருந்த ரூபாய் 21 ஆயிரம், சுமார் 90 ஆயிரம் மதிப்புள்ள மூன்று மடிக்கணினிகள், சிசிடிவி, டிவிஆர் செட், செல்போன்கள் என சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை திருடி சென்றுள்ளனர்.
சென்டருக்கு திரும்பிவந்த தமிழரசு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த பொருள்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின் இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினருக்கு தமிழரசு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேப்டாப் சர்வீஸ் சென்டரில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
நாமக்கல்: திருச்செங்கோட்டில் லேப்டாப் சர்வீஸ் சென்டரின் பூட்டை உடைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.