உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 464ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று அதிகாலை (ஜன.10) நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஒதப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று நாகூர் ஆண்டவரை வேண்டிக்கொண்டனர். நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான ஜனவரி 14ஆம் தேதி கொடியேற்று வைபவமும், தொடர்ந்து வரும் 23ஆம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து சந்தனக் கூடு ஊர்வலமும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:அரசின் அடுத்த அதிரடி - கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி இலவச டேட்டா!