நாகை மாவட்டம், நாகூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மூத்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நாகூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் காந்த குரலுக்கு சொந்தகாரரான நாகூர் ஹனிப்பா பாடிய பாடல்களை எழுதிய மூத்த கவிஞர் நாகூர் சாதிக்கிற்கு சான்றிதழ், விருது வழங்கப்பட்டன.
பின்னர் விழாவில் பேசிய மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜசேகரன், தமிழ் பேராசிரியராக ஐந்து வருடம் பணியாற்றி, பல தேர்வுகளை எழுதி உயர் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்த எஸ்.பி ராஜசேகரன், காவல்துறையில் தற்போது உயரிய அங்கீகாரத்தில் இருப்பதற்கு முழு காரணம் தமிழ்மொழிதான் என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும் தமிழ் மொழி என்னை மட்டும் வாழ வைக்க வில்லை என்றும், நம் அனைவரையும் தமிழ்மொழி வாழ வைத்துக் கொண்டிருகிறது என்றார்.