நாகை:பெங்களூரு பிராட்வே காவல் நிலையம் சிவாஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் குடும்பத்துடன் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். நாகூர் தர்காவில் வழிபாடு முடித்து விட்டு இன்று(மார்ச் 1) மாலை ஷமீர் அகமது அவரது மகன் முகமது அயான் (15) குடும்பத்துடன் நாகூர் சில்லடி கடற்கரையில் குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாகக் கடல் அலையில் சிக்கி ஷமீர் அகமது அவரது மகன் முகமது அயான் குடும்பத்தினர் கண் முன்னே இழுத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து குடும்பத்தினர் கூச்சலிட்டதால் அருகிலிருந்தவர்கள் கடலில் இறங்கிய தேடிப்பார்த்தனர். அப்போது ஷமீர் அகமது அவரது மகன் முகமது அயான் சடலமாக மீட்கப்பட்டனர்.
அடுத்து இருவரின் உடலையும் நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுற்றுலா வந்தபோது குடும்பத்தினர் கண்முன்னே தந்தை மகன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:காரை பின்னோக்கி இயக்கியபோது விபரீதம்: 4 வயது குழந்தை உயிரிழப்பு