நாகப்பட்டினத்தில் இரண்டாம் ஆண்டு நெய்தல் கடற்கரை கோடை விழா வெகு விமரிசையாக தொடங்கியது. ஜூன் 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கோடை விழாவினை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து தென்னக கலை பண்பாட்டுத் துறை சார்பில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், கரகாட்டம், பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றன.
இதில், பிரபல நாட்டியத் தாரகை, பத்மா சுப்பிரமணியன் குழுவினரின் பரத நாட்டியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கோடை விழா நடைபெறும் நாகை கடற்கரையில் மணல் சிற்பம் மலர் கண்காட்சி உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற்றன. விமரிசையாக நடைபெற்ற கோடை விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.