தமிழ்நாடு அரசின் பள்ளி பரிமாற்றத் திட்டம் 2016-17ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 20 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இத்திட்டம் ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றொரு பள்ளியின் மாணவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள வழிவகுக்கும்.
செம்பனார்கோயில் ஒன்றியம், மேலையூர் நடராஜா அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி பரிமாற்றத்திட்டத்தில் கலந்துகொண்டு, அறிவியல் ஆய்வகம், விளையாட்டரங்கம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப்பார்த்தனர். இதைத் தொடர்ந்து, செம்பனார்கோயில் சம்பந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 20 பேர், செம்பனார்கோயில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி பரிமாற்றத் திட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேபோல், மயிலாடுதுறை ஒன்றியத்தில் மல்லியம் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர் மயிலாடுதுறை ராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி பரிமாற்றத் திட்டத்தில் கலந்துகொண்டு பயனடைந்தனர். இத்திட்டத்தில் நிகழாண்டு முதல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க:
ஆதரவற்ற குழந்தைகளை 'தர்பார்' படத்திற்கு அழைத்துச் சென்ற ரஜினி ரசிகர்கள்