ETV Bharat / state

22 விழுக்காடு ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை!

author img

By

Published : Oct 3, 2020, 5:19 PM IST

நாகப்பட்டினம்: 22 விழுக்காடு ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குறுவை சாகுபடி என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்தாண்டு மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெற்றது.

தற்போது குறுவை அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல்லை கொள்முதல் செய்ய இன்று (அக்.3 ) நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 149 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக கீழையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் தொடங்கிவைத்தார்.

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

இந்நிலையில், நேரடி கொள்முதல் நிலையங்களில் 17 விழுக்காடு ஈரப்பதமுடைய நெல்லை கொள்முதல் செய்கின்றனர். சம்பா சாகுபடி நெல்லை 17 விழுக்காடு ஈரப்பதத்தில் வழங்கலாம் என்றும், ஆனால் குறுவை சாகுபடி நெல்லை 17 விழுக்காடு ஈரப்பதத்தில் வழங்குவது கடினம் என்றும், குறுவை நெல்லின் ஈரப்பத தன்மையை 22 விழுக்காடு ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அம்பாலா - ஹிசார் நெடுஞ்சாலையை முற்றுகையிட்ட விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.