ETV Bharat / state

' மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் இன்றி மக்கள் அவதி ' - அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேதனை

நாகப்பட்டினம்: மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேதனையுடன் தெரிவித்தார்.

author img

By

Published : Dec 11, 2019, 10:05 PM IST

minister o.s.manian
minister o.s.manian

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் சமீபத்தில் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து நாகை பகுதிகளிலுள்ள பல்வேறு தரப்பினர் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் அமைச்சர் ஓ.எஸ். மணியனை நேரில் சந்தித்து மருத்துவக் கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக நன்றி தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ' நாகப்பட்டினம் அருகேயுள்ள ஒரத்தூர் கிராமத்தில் 60 ஏக்கர் நிலத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, நிலத்தின் கட்டமைப்பு ஆய்வு, பொதுப்பணித்துறை ப்ளூ பிரின்ட் முதற்கொண்டு வழங்கப்பட்டுவிட்டது.

மருத்துவக் கல்லூரி அமைவதை யாராலும் மாற்ற முடியாது. மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகள் மருத்துவர்கள், ஸ்கேன் மருத்துவர்கள் என எந்த மருத்துவர்களும் இல்லாத காரணத்தால் நாகை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாகையில் மருத்துவக் கல்லூரி வருவது உறுதி

எனவே, நாகைக்கு வரவுள்ள மருத்துவக் கல்லூரியை அனைவரும் ஏற்றுக்கொண்டு வரவேற்க வேண்டுமென' என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம்: செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் பரபரப்பு!

Intro:மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் இன்றி மக்கள் ‘அவதி’
அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேதனை.Body:மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் இன்றி மக்கள் ‘அவதி’
அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேதனை.

நாகை மாவட்டம், ஓரத்தூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என மத்திய மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. அதனை தொடர்ந்து நாகை பகுதிகளில் உள்ள பல்வேறு தரப்பினர் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாகையில் தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் அமைச்சர் ஓ.எஸ். மணியனை நேரில் சந்தித்து மருத்துவ கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக நன்றி தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை அடுத்த ஓரத்தூர் கிராமத்தில் 60ஏக்கர் நிலத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க அரசனை வெளியிடப்பட்டு, நிலத்தின் கட்டமைப்பு ஆய்வு, பொதுப்பணித்துறை ப்ளூ பிரின்ட் முதற்கொண்டு வழங்கிவிட்டது, எனவே யாராலும் மருத்துவகல்லூரி அமைவதை மாற்றமுடியாது என்றும், நாகையில்தான் மருத்துவ கல்லூரி அமையும் என உறுதிப்பட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ; மயிலாடுதுறையில் மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பணியிடங்களிலும் மருத்துவர்களும் பணியில் இருப்பதாகவும், ஆனால் நாகை தலைமை மருத்துவமனையில் மருத்துவ பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், குறிப்பாக மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் மருத்துவர், ஸ்கேன் மருத்துவர்கள் என எந்த மருத்துவர்களும் இல்லாத காரணத்தால் நாகை மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக வேதனை தெரிவித்தார். எனவே நாகைக்கு வரவுள்ள மருத்துவ கல்லூரியை அனைவரும் ஏற்றுக்கொண்டு வரவேற்க வேண்டுமென அமைச்சர் ஓஎஸ்.மணியன் கேட்டுக்கொண்டார்.

பேட்டி - ஓ.எஸ். மணியன் கைத்தறி துறை அமைச்சர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.