நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதனையொட்டி நவ.16ஆம் தேதி கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், மயூரநாதர் அபயாம்பிகை துலா உற்சவம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு துலா கட்ட மண்டபத்தில் அபிநயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறுபடை முருகன் ஞானப்பழம் சாப்பிடும் நிகழ்ச்சி, சண்முகா பவுத்துவம், மேற்கத்திய இசையுடன், கர்நாடக இசைக் கச்சேரி, பரத நாட்டியமாடும் ஃப்யூஷன் நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நாட்டியங்களை மாணவிகள் நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான மக்கள் குவிந்தனர்.