ETV Bharat / state

'எங்களுக்கும் நிவாரணம் கொடுங்க..!' - ஐஸ்கட்டி உற்பத்தியாளர்கள் போர்க்கொடி! - nagappattinam

நாகப்பட்டினம்: "மீன்வரத்து தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்குவதுபோல், பனிக்கட்டி உற்பத்தியாளர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று, ஐஸ்கட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனிக்கட்டி உற்பத்தியாளர்கள்
author img

By

Published : May 16, 2019, 5:31 PM IST

Updated : May 16, 2019, 6:58 PM IST

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை நம்பி பழையார், தரங்கம்பாடி, அக்கரைப்பேட்டை, திருமுல்லைவாசல், கீச்சாங்குப்பம், கோடியக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐஸ்கட்டி உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 700 டன் ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்யப்படுகின்றன. விசைப்படகுகளுக்கு மொத்தமாகவும், மீன்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கும் பனிக்கட்டியை விற்பனை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை வங்க கடலில் 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று அரசு சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தடைப்பட்டு கிடப்பதால் ஐஸ்கட்டி உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது. ஐஸ் உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் முடங்கியதால், தற்போது அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அதனை பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஐஸ்கட்டி உற்பத்தியாளர்கள்

பராமரிப்பு பணிகளுக்கு சுமார் ரூ.2 லட்சம் ரூ.5 லட்சம் வரை கூடுதலாக செலவாகிறது. எனவே, மீன்பிடி தொழிலை நம்பி வாழும் ஐஸ்கட்டி உற்பத்தியாளர்களுக்கு பராமரிப்பு பணிகளுக்கு ரூ.2 லட்சம் வங்கி மானியத்துடன் ரூ.5 லட்சம் கடனும், பனிக்கட்டி உற்பத்தியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்குவதுபோல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐஸ்கட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:நாகையில், மீன்வரத்து குறைந்ததால், பனிக்கட்டி உற்பத்தி முற்றிலும் முடங்கியது: தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல், பனிக்கட்டி உற்பத்தியாளர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

Body:நாகையில், மீன்வரத்து குறைந்ததால், பனிக்கட்டி உற்பத்தி முற்றிலும் முடங்கியது: தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல், பனிக்கட்டி உற்பத்தியாளர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

மீன்பிடி தொழிலை நம்பி நாகை மாவட்டத்தில் உள்ள பழையார், தரங்கம்பாடி, அக்கரைப்பேட்டை, திருமுல்லைவாசல்,கீச்சாங்குப்பம், கோடியக்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 50 திற்கும் மேற்பட்ட பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

நாள் ஒன்றுக்கு 700 டன் பனிக்கட்டிகளை உற்பத்தி செய்யும் இவர்கள் விசைப்படகுகளுக்கு மொத்தமாகவும், மீன்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கும் அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனிடையே மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 15 ம் தேதி வரை வங்க கடலில் 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அரசு சார்பில் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, இந்தாண்டும் விசைப்படகு மீனவர்கள் கடந்த மாதம் 15-ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் தடைக்காலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள 2 ஆயித்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், அங்கு பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் முடங்கியுள்ளதால், தற்போது அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அதனை பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தடைகாலம் முடிந்து மீனவர்களுக்கு தேவையான பனிக்கட்டிகளை தரமாக உற்பத்தி செய்தும் வழங்க வேண்டும் என்பதால், கடலோர மாவட்டங்களில் உள்ள ஒட்டுமொத்த பனிக்கட்டி உற்பத்தி நிலையங்களிலும் புதிய கேன்கள் பதிப்பது, கேஸ் ஏற்றுவது மற்றும் வர்ணம் பூசுவது போன்ற பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பனிக்கட்டி நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்கு சுமார் 2 லட்சத்திருந்து  5 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக செலவாவதால், அரசு தடைகாலத்தில் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் பனிக்கட்டி உற்பத்தியாளர்களுக்கும் பராமரிப்பு பணிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வங்கி மானியத்துடன் 5லட்சம் ரூபாய் கடனும், பனிக்கட்டி உற்பத்தியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல், நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
Last Updated : May 16, 2019, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.