மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்றவந்தது. நேற்றைய தினம் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் குமரன் தலைமையில் இரண்டாவது நாளான இன்று ஓட்டப் பந்தய போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில், நாகை மாவட்டம் முழுவதும் உள்ள 80 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 360 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 240 மாணவர்கள் இம்மாதம் 17 முதல் 23ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதையும் படங்க: சிறுவனை மீட்க வேண்டி தடகள வீரர் தொடர் ஓட்டம் !