ETV Bharat / state

காணும் பொங்கல் விழாவைக் கொண்டாடிய 101 இளம் பெண்கள் - Pongal Festival of Nagai

நாகை: காணும் பொங்கல் விழாவில் 101 இளம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கும்மியடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

காணும் பொங்கல் விழாவை கொண்டாடிய இளம் பெண்கள்
காணும் பொங்கல் விழாவை கொண்டாடிய இளம் பெண்கள்
author img

By

Published : Jan 17, 2020, 4:24 PM IST

காணும் பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில், திருமணமாகாத 101 இளம் பெண்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் பச்சரிசியிட்டு பொங்கல்வைத்தனர்.

அதன்பின்னர், பொங்கல் பானையை அவர்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாகச் சென்று முச்சந்தி மாரியம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி கும்மியடித்து, பாட்டுப்பாடி காணும் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

காணும் பொங்கல் விழாவைக் கொண்டாடிய இளம் பெண்கள்

இதையும் படிங்க: 100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடத மக்கள்; தனிநபராகக் கொண்டாடும் ஆசிரியர்!

Intro:நாகையில் நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில் 101 கன்னிப் பெண்கள் பொங்கல் வைத்து கும்மியடித்து உற்சாக கொண்டாட்டம்:Body:நாகையில் நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில் 101 கன்னிப் பெண்கள் பொங்கல் வைத்து கும்மியடித்து உற்சாக கொண்டாட்டம்:

காணும் பொங்கல் விழா தமிழகம் முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைப்போல் நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில், திருமணமாகாத 101 கன்னிப்பெண்கள் வீட்டு வாசல்களில் வண்ண கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைத்தனர். அதன்பின்னர் பொங்கல் பானையை தலையில் சுமந்து சென்ற கன்னிப் பெண்கள் ஊர்வலமாக முச்சந்தி மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கன்னிப்பெண்கள் ஒரே இடத்தில் கூடி கும்மியடித்து பாட்டுப்பாடி காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.