ETV Bharat / state

சுவர் விவகாரம் - நிபந்தனை பிணையில் வெளிவந்த நாகை திருவள்ளுவன் - நாகை திருவள்ளுவன் ஜாமின்

கோவை: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்திற்கு நியாயம் கேட்டு போராடியதால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நாகை திருவள்ளுவன் நிபந்தனை பிணையில் வெளிவந்தார்.

பிணையில் வெளிவந்த நாகை திருவள்ளுவன், nagai thiruvalluvan released on condition bail
nagai thiruvalluvan, நாகை திருவள்ளுவன்
author img

By

Published : Jan 14, 2020, 2:15 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்திற்கு நியாயம் கேட்டு போராடியதற்காக நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அவர் இன்று நிபந்தனை பிணையில் வெளிவந்தார். அப்போது அவருக்கு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் கு. இராமகிருட்டிணன் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

பிணையில் வெளிவந்த நாகை திருவள்ளுவன்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாகை திருவள்ளுவன் "நடூர் பகுதியில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்ததை காவல் துறையினர் விபத்து போல் சித்தரித்துவிட்டனர். உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கேட்டு போராடினால் போராடுபவர்களை மாநில அரசு பொய் வழக்குப்பதிவு செய்து அடக்குகிறது” என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய நாகை திருவள்ளுவன்

மேலும் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு களைகட்டாத கோயம்பேடு!

Intro:மேட்டுப்பாளையம் பிரச்சனையில் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நாகை திருவள்ளுவன் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்Body:tn_cbe_01_nagai_thiruvalluvan_jameen_visu_TN10027
Wrap

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்திற்கு நியாயம் கேட்டு போராடி கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நாகை திருவள்ளுவன் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

ஜாமீனில் வெளிவந்த அவருக்கு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாகை திருவள்ளுவன் நடூர் பகுதியில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததை காவல்துறையினர் விபத்து போல் சித்திகரித்து விட்டனர் என்று தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கேட்டு போராடினால் போராடுபவர்களை மாநில அரசு பொய் வழக்கு பதிவு செய்து அடக்குகிறது என்று கூறினார்.

மேலும் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட மக்க்ளுக்கு தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.