உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த நாகை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் சுற்றுலாத் தளங்கள் அதிகமாக உள்ளதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் கோவிட்-19 வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எர்ணாகுளத்திலிருந்து நாகை வந்த ரயில் பயணிகளிடம் தெர்மல் ஸ்கேன் கருவி கொண்டு மருத்துவக் குழு பரிசோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பஞ்சாப்பில் முதல் உயிரிழப்பு; இந்தியாவில் 4ஆக உயர்வு!