நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணகிரிநாதன். இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர், தனது வீட்டில் விற்பனைக்காக ஒரு அடி முதல் ஐந்து அடி உயரம் வரையிலான 33 விநாயகர் சிலைகளை வைத்திருந்தார்.
இந்நிலையில், தகவல் அறிந்து அருணகிரிநாதனின் வீட்டிக்கு சென்ற வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அனுமந்தன், துணை வட்டாச்சியர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் இந்தாண்டு கரோனா காரணமாக விநாயகர் சிலைகள் பயன்படுத்த தடைவித்துள்ளதை சுட்டிக்காட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகளை கைப்பற்றி தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, பின்னர் அருணகிரிநாதனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: விநாயகர் சிலை சேதமடைந்ததால் பரபரப்பு!