புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறைக்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஆர்.லலிதாவை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி, அதிமுக பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள மணல்மேடு தாலுகாவில் மணல்மேடு பேரூராட்சி, கடலங்குடி, திருச்சிற்றம்பலம், ஆத்தூர், கிழாய், பட்டவர்த்தி, சித்தமல்லி, வில்லியநல்லூர், கொற்கை உள்ளிட்ட 22 ஊராட்சிகளை இணைக்க மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அளித்தார். இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்தையும் சந்தித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.