சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 12) தொடங்கியது. வேட்புமனு தாக்கலின் இரண்டாம் நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மனு தாக்கல்செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பூம்புகார் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ். பவுன்ராஜ் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் இன்று மனு தாக்கல்செய்தார்.
அவருடன் பாமக மாநிலத் துணைத் தலைவர் முத்துக்குமார், பாஜக ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் அகோரம் ஆகியோர் சென்றனர். முன்னதாக வேட்புமனு தாக்கல்செய்ய தனது பேரனையும் வேட்பாளருடன் அழைத்துவந்தார்.
இதையும் படிங்க:'குடும்ப அரசியல் செய்தால் என்னை நிராகரிப்பார்கள்' - வேட்புமனு தாக்கலுக்குப் பின் உதயநிதி பேட்டி