ETV Bharat / state

மு.க. ஸ்டாலின் விளம்பரம் தேடுகிறார்: அமைச்சர் வேலுமணி - minister sp velumani criticized mk stalin

விளம்பரம் தேடுவதற்கே மு.க. ஸ்டாலின் மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்குகிறார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.

minister sp velumani criticized mk stalin
விளம்பரம் தேடும் மு.க.ஸ்டாலின்; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கு
author img

By

Published : Dec 7, 2020, 4:52 PM IST

Updated : Dec 7, 2020, 7:24 PM IST

நாகப்பட்டினம்: விளம்பரம் தேடுவதற்கே மு.க. ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்குகிறார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

நாகையில் நிவர், புரெவி புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

விளம்பரம் தேடும் மு.க.ஸ்டாலின்; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கு

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "நாகை மாவட்டத்தில் 122 இடங்களில் ஆறுகள் உடைப்பு ஏற்பட்டு 60ஆயிரத்து 583 பேர் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 1,001 வீடுகள் சேதமடைந்துள்ளன. 252 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழை, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை செய்துவருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விளம்பரம் தேடுவதற்காகவே மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார்" என்றார்.

minister sp velumani criticized mk stalin
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்கள்

செய்தியாளர் சந்திப்புக்கு பின்பு, நாகை மாவட்டம் மகிழி, இறையான்குடி, ஆய்மூர் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கிய 60 ஆயிரம் ஹெக்டேர் சம்பா பயிர்களை பார்வையிட்ட அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இதையும் படிங்க: 'ஜெயலலிதா குறித்து பேசினால்...திமுக தலைவர்கள் குறித்து பேசுவோம்'- ஜெயக்குமார் எச்சரிக்கை!

Last Updated : Dec 7, 2020, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.