ETV Bharat / state

தருமபுரம் ஆதினத்திடம் ஆசிபெற்ற அமைச்சர் பெரியகருப்பன்

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், தனது மனைவியுடன் சென்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திடம் ஆசிபெற்றார்.

minister-periyakaruppan-get-bless-from-dharmapuram-adheenam
தருமபுரம் ஆதினத்திடம் குடும்பத்துடன் ஆசி பெற்ற அமைச்சர் பெரியகருப்பன்
author img

By

Published : Sep 21, 2021, 10:40 AM IST

மயிலாடுதுறை: அமைச்சர் பெரியகருப்பன் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் நேற்று (செப். 20) தரிசனம்செய்தார். மேலும், அங்கு நடைபெற்ற அவரது உறவினர் நவநீதகிருஷ்ணன், சுப்புலட்சுமி தம்பதியினரின் சஷ்டியப்த பூர்த்தி திருமணத்திலும் கலந்துகொண்டார்.

பின்னர் நேற்று நண்பகலில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்குச் சென்ற அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதினம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்து பெரியகருப்பன், அவரது மனைவி ஆகியோர் ஆசிபெற்றனர்.

தருமபுரம் ஆதினத்திடம் குடும்பத்துடன் ஆசிபெற்ற அமைச்சர் பெரியகருப்பன்

மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆதினம் இடம் வழங்கியது தொடர்பாக குருமகா சந்நிதானத்துடன் அமைச்சர் கலந்துரையாடினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் லலிதா, ஆதின கல்லூரி செயலாளர் செல்வநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'ஆவணி மூலத்திருநாளே தொழிலாளர் நாளாகக் கொண்டாட வேண்டிய நாள்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.