தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் இன்று (ஜன.04) மூன்று கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
பனங்குடி, கீழ்வேளூர், தலைஞாயிறு பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு செங்கரும்பு, சீனி, அரிசி, திராட்சை, முந்திரி, 2ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி ஏற்ற பிறகு பொங்கல் தினத்தில் அனைத்து மக்களுக்கும் விலையில்லா கதர் வேட்டி, சேலை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண்கள் வாழ்வாதாரம் மேம்பட ரூ. 80 கோடி கடனுதவி: அமைச்சர் எஸ்.பி வேலுமணி