ETV Bharat / state

'அராஜக கட்சி திமுக' - அமைச்சர் ஓ.எஸ். மணியன் விமர்சனம்!

நாகப்பட்டினம்: சட்டத்தை மதிக்காத, ஜனநாயகத்தை தழுவாத, அராஜக கட்சி திமுக என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் ஓ.எஸ். மணியன் விமர்சனம்
அமைச்சர் ஓ.எஸ். மணியன் விமர்சனம்
author img

By

Published : Jan 3, 2021, 1:14 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் அமையவுள்ள தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் சில்லறை டீசல் விற்பனை நிலையத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று (ஜன. 3) அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், “திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டதற்கு, கருத்து சொல்ல, கேள்வி கேட்க அனுமதி இல்லை, ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு ஒரு பெண் என்றும் பாராமல் தாக்கப்பட்டுள்ளார். அது கிராமசபையா? அல்லது திமுக சபையா?.

அமைச்சர் ஓ.எஸ். மணியன் விமர்சனம்

திமுக எப்போதும் சட்டத்தை மதிக்காத, ஜனநாயகத்தை தழுவாத, அராஜக கட்சி. மற்றவர்களை பற்றி கவலை இன்றி அரசியல் லாபத்திற்காக செயல்படும் கட்சி திமுக” என விமர்சித்தார்.

மேலும், மு.க. அழகிரி புதிய கட்சி தொடங்குவதாக வெளியாகும் கருத்துக்கு, யார் கட்சி தொடங்கினாலும் வாழ்த்துகள் என்றார்.

இதையும் படிங்க...அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் 5 வருடங்களாக அலைகழிக்கப்படும் குடும்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.