ETV Bharat / state

குறுவை சாகுபடி நடைபெறுமா..? - விவசாயிகள் கலக்கம்!

நாகப்பட்டினம்: காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தை 8 மாதங்களாகியும் மத்திய அரசு கூட்டாமல் இருப்பதால், டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.

டெல்டா மாவட்டம்
author img

By

Published : May 12, 2019, 9:48 AM IST

குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசன விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் மனவேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், 8 மாதங்களாகியும், காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தை மத்திய அரசு கூட்டாமல் அதன் தலைவரையும் நியமிக்காமல் இருப்பது ஏன்? டெல்டா விவசாயிகள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

டெல்டா மாவட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை கூட்ட தமிழக அரசு மத்திய அரசுக்கு உடனடியாக அழுத்தம் தருவதுடன் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தை 8 மாதங்களாகியும் மத்திய அரசு கூட்டாமல் இருப்பதால், டெல்டா மாவட்டத்தில் எட்டாவது ஆண்டு குறுவை சாகுபடி நடைபெறுமா? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

Intro:டெல்டா மாவட்டத்தில் எட்டாவது ஆண்டு குறுவை சாகுபடி நடைபெறுமா? அல்லது பொய்த்துப்போகுமா? என்ற கவலையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள்:

Body:காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தை 8 மாதங்களாகியும் மத்திய அரசு கூட்டாமல் இருப்பதால், டெல்டா மாவட்டத்தில் எட்டாவது ஆண்டு குறுவை சாகுபடி நடைபெறுமா? அல்லது பொய்த்துப்போகுமா? என்ற கவலையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள்:

குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி டெல்டா பாசன விவசாயிகளுக்கு தமிழக அரசு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை பெறுவதற்குரிய நடவடிக்கையில் தமிழக அரசு இதுவரை இறங்காததால் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமலும் உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தை 8 மாதங்களாகியும், மத்திய அரசு கூட்டாமல் அதன் தலைவரையும் நியமிக்காமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள டெல்டா விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியத்தை கூட்ட தமிழக அரசு மத்திய அரசுக்கு உடனடியாக அழுத்தம் தருவதுடன் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இவ்வாண்டு நடைபெறுமா? அல்லது பொய்த்துப்போகுமா? என்ற கவலையில் உள்ள தமிழக விவசாயிகளின் நிலையை அறிந்து, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.