ETV Bharat / state

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவுக்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா! - அம்பேத்கர் நினைவேந்தலுக்கு தடை

பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக வசிக்கும் இடத்தில் கலவரத்தை தூண்டு வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினரின் செயல் இருப்பதாக தலைஞாயிறு, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

பொது மக்கள் தர்ணா
பொது மக்கள் தர்ணா
author img

By

Published : Dec 3, 2022, 8:04 PM IST

Updated : Dec 3, 2022, 10:36 PM IST

மயிலாடுதுறை: பட்டவர்த்தி, தலைஞாயிறு பேருந்து நிறுத்த பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டு, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் அசம்பாவிதங்களை தடுக்க பிரச்னை ஏற்பட்ட இடத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் அவரது உருவப்படம் வைத்து கூட்டம் கூடாமல் நிகழ்ச்சி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதுதொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் பட்டவர்த்தி, நடராஜபுரம், தலைஞாயிறு, ஆதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் அம்பேத்கர் படம் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்

நிகழ்ச்சி நடைபெறாமல் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சுமூக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க உள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் வேண்டுமென்றே புதிதாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற்றால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Hari Vairavan:நடிகர் சங்கம் உதவ வேண்டும்: ஹரி வைரவனின் மனைவி கோரிக்கை!

Last Updated : Dec 3, 2022, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.