ETV Bharat / state

வறண்ட நிலையில் குளங்கள்... தண்ணீரின்றி தவிக்கும் மக்கள்! - nagai 7 ponds no water

நாகை: மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி ஊராட்சியில் உள்ள ஏழு குளங்களுக்குத் தண்ணீர் போய்ச் சேராததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

நாகையில் வறண்ட நிலையில் குளங்கள்
author img

By

Published : Nov 5, 2019, 8:02 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி ஊராட்சியில் நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனர். அங்கு உடையார் குளம், அல்லிக்குளம், பாப்பாங்குளம், ஆண்டிக்குளம், அட்டக்குளம் உள்ளிட்ட ஏழு குளங்கள் அப்பகுதி மக்களுக்கு நீராதாரமாக இருந்து வருகின்றன.

வறண்ட நிலையில் குளங்கள்

இந்த குளங்களுக்குச் செல்லும் நீர் வழிப்பாதையான கண்ணிகள் தூர்வாரப்படாமல் இருப்பதால் எல்லா குளங்களுக்கும் தண்ணீர் போய் சேராமல் பல ஆண்டுகளாக வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள்

இதனையடுத்து நல்லத்துக்குடி பாசன வாய்க்காலை மட்டும் தூர்வாரிய ஊராட்சி நிர்வாகத்தினர் குளங்களுக்குச் செல்லும் கண்ணிகளைத் தூர்வாராததால் , இந்தாண்டும் குளங்களுக்கு தண்ணீர் போய் சேராமல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக குளங்களுக்கு செல்லும் நீர் வழிப்பாதைகளைத் தூர்வாரி தண்ணீர் போய்ச் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:வாய்கால் தூர்வாரப்பட்டும் நல்லத்துக்குடி ஊராட்சியில் உள்ள 7 குளங்களுக்கு தண்ணீர் போய் சேராததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. குளங்களுக்கு செல்லும் நீர்வழிப்பாதையான கண்ணிகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி ஊராட்சியில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உடையார்குளம் அள்ளிகுளம், பாப்பாங்குளம், ஆண்டிகுளம், அட்டகுளம் உள்ளிட்ட 7 குளங்கள் நீராதாரமாக உள்ளன. இந்த குளங்களுக்கும் செல்லும் நீர்வழிப்பாதையான கண்ணிகள் தூர்வாராப்படாமல் புதர்மண்டியும், ஆக்ரமிப்பட்டுள்ளதால் எல்லா குளங்களுக்கும் தண்ணீர் போய் சேராமல் பல ஆண்டுகளாக வரண்ட நிலையில் உள்ளது. இதனால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தியதால் நல்லத்துக்குடி பாசன வாய்காலை மட்டும் தூர்வாரிய ஊராட்சி நிர்வாகத்தினர் குளங்களுக்கு செல்லும் கண்ணிகளை தூர்வாராததால் இந்த ஆண்டும் குளங்களுக்கு தண்ணீர் போய் சேரவில்லை என்றும் உடனடியாக குளங்களுக்கு செல்லும் நீர்வழிப்பாதைகளை தூர்வாரி தண்ணீர் போய் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி: சந்திரமோகன் கிராமவாசிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.