மயிலாடுதுறை: தருமபுரத்தில் பழமை வாய்ந்த ஆதீன சைவ திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ஆதீன வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் பயிலும் 760 மாணவ, மாணவிகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சி ஆதீன மடத்தில் இன்று (டிச.20) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நாள்காட்டிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம், மயிலாடுதுறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற குமரக்கட்டளை வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 24.3.2023 அன்று நடைபெறும். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: வடபழனி கோயிலில் முறைகேடு - இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதி பரிந்துரை