மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் பின்புறம் உள்ள குறுகிய சந்தின் இரண்டு பக்கமும் இரண்டு குட்டைகள் உள்ளன. இந்த இரண்டு குட்டைகளிலும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கொட்டப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் மற்றும் துறை அலுவலர்கள் குட்டை நீரில் கொட்டப்பட்டிருந்த ரேஷன் அரிசியை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், 10க்கும் மேற்பட்ட மூட்டைகள் குட்டை கரையிலும், பலமூட்டைகள் குட்டையில் வீசப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மூட்டைகள் பிரிக்கப்பட்டும் குட்டையில் கொட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து, குட்டையில் கொட்டப்பட்டிருந்த நியாயவிலைக்கடை அரிசியின் மாதிரியை ஆய்வுக்காக அலுவலர்கள் சேகரித்தனர். அரிசி தண்ணீரில் ஊரியிருப்பதால் எந்தரக அரிசி என்று தெரியவில்லை.
இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டவழங்கல் அலுவலர் முருகேசன் தெரிவித்தார். முன்னதாக அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறுகையில், “கிட்டதட்ட 50 மூட்டைகள் ரேசன் அரிசி கொட்டப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும், “ரேசன் அரிசியை கொட்டி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:thiruvannamalai annamalaiyar temple: அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை - ரூ.71 கோடி வசூல்