நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, உடனடியாக அந்த வங்கியில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வங்கி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, வங்கி மூடப்பட்டிருக்கும் என, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கணினி அறையில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர் அறையில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊழியர்களுக்கு கரோனா: நகைக் கடைகள் மூடல்!