மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த மருத்துவக்கல்லூரியை நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை அடுத்த நீடூர் அரபிக் கல்லூரியின் 21ஏக்கர் நிலத்தை மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு தானமாக வழங்க ஒப்புதல் அளித்து மாவட்ட ஆட்சியரிடம் நீடூர் முஸ்லீம் ஜமாத்தார்கள் உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனர்.
நீடூர் முஸ்லீம் ஜமாத்தார்கள் அளிக்கும் 21 ஏக்கர் நிலத்தில் மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்க வலியுறுத்தி, பொதுத்தொழிலாளர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மருத்துவத் தேர்வு முறைகேடு: மற்றுமொரு மருத்துவக் கல்லூரி தேர்வு மைய அங்கீகாரம் ரத்து