மயிலாடுதுறை: பெரம்பூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவர் மீது பெரம்பூர் காவல் நிலையம் மற்றும் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் 48 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மீனாவை பெரம்பூர் காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் போலீஸார் கைது செய்து திருவாரூர் கிளை சிறைக்கு அனுப்பினர். தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட மீனாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் லலிதா, மீனாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து திருவள்ளூர் கிளைச்சிறையில் இருந்த மீனாவை போலீசார் திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சொகுசாக வாழ ஆசை..! நடிகர் வீட்டில் கொள்ளையடித்த காவலாளி..