ETV Bharat / state

கலை நிகழ்ச்சி குத்தாட்டம் சிலம்பாட்டத்துடன் களைகட்டிய மாவீரன் வன்னியர் சங்கப் பரப்புரை பொதுக்கூட்டம்! - election campaign

மயிலாடுதுறை: நாடக கலைஞர்களின் கலைநிகழ்ச்சி, தொண்டர்களின் குத்தாட்டம், சிறுவர்களின் சிலம்பாட்டத்துடன் களைகட்டிய மாவீரன் வன்னியர் சங்கப் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை
கலைநிகழ்ச்சி குத்தாட்டம் சிலம்பாட்டத்துடன் கலைகட்டிய மாவீரன் வன்னியர் சங்க பிரச்சார பொதுக்கூட்டம்
author img

By

Published : Apr 1, 2021, 8:09 AM IST

மயிலாடுதுறையில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக மயிலாடுதுறை மாவட்டத்திற்குள்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாவீரன் வன்னியர் சங்கம் சார்பில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாடகக் கலைஞர்களின் கரகாட்டம், மாவீரன் வன்னியர் சங்கத் தொண்டர்களை உற்சாகத்துடன் குத்தாட்டம் போடவைத்தது.

திமுக கூட்டணி வேட்பாளர்
கலைநிகழ்ச்சி குத்தாட்டம் சிலம்பாட்டத்துடன் கலைகட்டிய மாவீரன் வன்னியர் சங்க பிரச்சார பொதுக்கூட்டம்

மாவீரன் வன்னியர் சங்க நிறுவனர் வி.ஜி.கே. மணிகண்டன், திறந்த வாகனத்தில் கருணாநிதி வேடமணிந்தவருடன் ஆதரவு கேட்டு விழா மேடைக்கு வந்தார். அப்போது பட்டாசு வெடித்தும் சிறுவர்கள் சிலம்பாட்டத்துடனும், தொண்டர்கள் குத்தாட்டத்துடனும் வரவேற்பளித்தனர்.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர், சீர்காழி, பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி, மாவீரன் வன்னியர் சங்க நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.

இதில் கலந்துகொண்ட மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜகுமாரை அறிமுகப்படுத்தி, கைச்சின்னத்தில் வாக்களித்து தொகுதியில் நிறைவேற்றப்படாத திட்டங்களுக்குத் தீர்வுகாண வாய்ப்பளிக்க வேண்டும் என்று பேசினர்.

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜகுமார் பேசுகையில், "நான் ஏற்கனவே ஐந்தாண்டு காலம், இந்தச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு எம்எல்ஏவாக இருந்து நிறைய திட்டங்களையும், செயல்பாடுகளையும் செய்துள்ளேன்.

அதில் குறிப்பிடும்படியாக சாய் விளையாட்டு அரங்கம், முட்டம் பாலம், நகராட்சிக் கட்டடம், பிடிஓ கட்டடம், நீதிமன்ற கட்டடம் போன்ற நிறைய திட்டங்களை நான் செய்துள்ளேன். இதுபோல புறவழிச்சாலை உருவாக்குவதற்காக நான் எல்லா ஏற்பாடுகளும் செய்தேன்.

அதற்காக 3 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுத் தந்தும் தனக்குப்பிறகு வந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. பர்மா காலனிக்குப் பட்டா வாங்கி கொடுத்தேன். இந்திரா காலனி மக்களுக்கு பட்டா வாங்கித் தருவேன்.

நிறைவேற்றப்படாத திட்டங்களை நிறைவேற்றித் தருவதற்கு கைச்சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு, புதுச்சேரியில் அமித் ஷா இன்று பரப்புரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.